×

மனு அளிக்க வந்தபோது மயங்கி விழுந்த வாலிபர் சாவு

திருவாரூர், நவ.22: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா வேர்குடி கிராமத்தில் வசித்து வந்தவர் பிரபாகரன் (32). விவசாயக் கூலித் தொழிலாளி.  இவருக்கு செந்தமிழ்ச்செல்வி (23) என்ற மனைவி, ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் பிரபாகரனுக்கும் அவரது பங்காளிகளான வீரையன், முத்துக்குமார் மற்றும் சந்திரசேகரன் ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கஜா புயலின்போது சேதமடைந்த தனது வீட்டை பிரபாகரன் சீரமைத்தபோது பங்காளிகள் ஒன்று சேர்ந்து வீடு கட்டக்கூடாது என தடுத்ததால் பிரபாகரன் கூத்தாநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அங்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் கடந்த 11ம் தேதி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் மனு அளிக்க சென்றிருந்தார். அப்போது பிரபாகரன் திடீரென மயங்கி விழுந்தார்.

விசாரித்தபோது, அவர் ஏற்கனவே வீட்டில் பூச்சி மருந்தை குடித்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதால் இதனை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது